கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மற்றும் அனைத்துக் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று (புதன்கிழமை) நாகர்கோவிலில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் கன்னியாகுமரி மாவட்ட தலைவர் டேவிட்சன் பேசும்போது, "நாகர்கோவில் நகரப் பகுதிகளில் சாலை விரிவாக்கத்திற்காக மாநகராட்சி கையகப்படுத்தும் நிலங்களுக்கு இதுவரை உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை.