தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடும்பத்தில் கருத்து வேறுபாடு: கணவனின் மண்டையைப் பதம்பார்த்த மனைவி - கணவனின் மண்டையை பிளந்த மனைவி

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் வசிக்கும் கணவன் மனைவிக்கு இடைய ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் அடியாள்களுடன் வந்து கணவனின் மண்டையை மனைவி அடித்து உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது

Husband wife family fight
Husband wife family fight

By

Published : Oct 30, 2020, 4:55 PM IST

குமரி மாவட்டம் நாகர்கோவில் அலெக்ஸாண்ட்ரா பிரஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அன்பு. இவர் அப்பகுதியில் குளிர்பான கடை ஒன்றை நடத்திவருகிறார். இவருக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு மோனிகா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த எட்டு மாதங்களாக மோனிகா தனியாக வசித்துவந்தார்.

எனினும், அவ்வப்போது அன்புவின் வீட்டுக்குச் சென்று அன்புவிடமும் அவரது பெற்றோருடனும் மோனிகா தகராறில் ஈடுபட்டுவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று பிற்பகல் அன்பு தனது குளிர்பான கடையில் இருந்தபோது மோனிகா திடீரென அங்கு அடியாள்களுடன் வந்தார்.

பின்பு, அன்புடன் தகராறில் ஈடுபட்ட அவர், கடையில் இருந்த சர்பத் பாட்டிலை எடுத்து கணவனின் தலையில் அடித்து உடைத்தார். இதில் அன்புவின் மண்டை உடைந்து, ரத்தம் கொட்டியது. இதைத் தொடர்ந்து மோனிகாவும் அவரது அடியாள்களும் அங்கிருந்து சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர், தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டிய நிலையில் இருந்த அன்புவை மீட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்தச் சம்பவம் குறித்து வடசேரி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: கழிவுநீரால் வந்த தகராறு: இளம்பெண்ணை குத்திக்கொன்ற அண்டை வீட்டுக்காரர்!

ABOUT THE AUTHOR

...view details