கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே மேலகிருஷ்ணன்புதூர் பகுதியை சேர்ந்தவர் வினோத். இவர் அதே பகுதியில் வெல்டிங் உள்ள பட்டறையில் தினக்கூலியாக பணிபுரிந்து வந்தார். இன்று (செப். 30) வழக்கம்போல் இரும்பு கதவுக்கு வெல்டிங் செய்துகொண்டிருந்தார் அப்போது மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.
வீடியோ: பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த வெல்டிங் தொழிலாளி - நாகர்கோவில்
நாகர்கோவில் அருகே வெல்டிங் தொழிலாளி ஒருவர் பணியின்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
இதனால் வினோத் சுருண்டு விழுந்தார். அதைக்கண்ட சக ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்து, வினோத்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முற்பட்டனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த நேசமணிநகர் போலீசார் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். விசாரணை நடந்துவருகிறது.
இதையும் படிங்க: புகார் அளித்த பெண்ணை தாக்க முயன்ற உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம்