தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சிஏஏ-க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் வரை போராடுவோம்' - 'Kuṭiyurimai tirutta caṭṭattukku etirāka caṭṭamaṉṟattil tīrmāṉam niṟaivēṟṟum varai pōrāṭuvōm': Islāmiya amaippukaḷ 115/5000 'We will fight until passage of resolution in the legislature against the Citizenship Amendment Act': Islamic organizations

நாகர்கோவில்: குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று தமிழ்நாடு ஜேக் அமைப்பின் பொதுச்செயலாளர் நூர்முகமது கூறினார்.

We will fight until the resolution in the legislature is passed
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் வரை போராடுவோம்

By

Published : Mar 16, 2020, 8:34 AM IST

அனைத்து இஸ்லாமிய ஜமாத் மற்றும் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம் கன்னியாகுமரியில் நடைபெற்றது. இஸ்லாமியர்களின் தெருவில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு இமாம் ரஹ்மத்துல்லா தலைமை வகித்தார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஜேக் அமைப்பின் பொதுச்செயலாளர் நூர்முகமது, 'தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு போன்ற சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு கட்டப் போராட்டங்கள் அகிம்சை முறையில் நடந்து வருகின்றன. ஆனால் மத்திய, மாநிலங்களில் ஆட்சி செய்பவர்கள் மக்களின் நியாயமான கோரிக்கைகளை செவிசாய்க்காத அரசாக உள்ளனர்.

இந்தப் போராட்டத்தை இஸ்லாமியர்களின் போராட்டம் என திசைதிருப்பும் அளவுக்கு ஆளும் அரசுகள் ஈடுபட்டு வருகிறது. ஆனால் சாதி, மதங்களைக் கடந்து இந்தப் போராட்டம் நடந்து வருகிறது. ஆனால், இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கத்தில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர், 49 இஸ்லாமிய அமைப்புகளை அழைத்துப் பேசினார்.

அதில் மத்திய உள்துறை அமைச்சரின் கருத்தை அப்படியே திணிப்பதுபோல, பேச்சுவார்த்தை அமைந்தது. மத்திய அமைச்சர் உண்மையிலேயே நாட்டில் நடக்கும் போராட்டத்தைக் கண்டு கொண்டு முடிவு எடுப்பார் என்றால், முதலாவது 2003ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தில் இருக்கக்கூடிய விதிமுறையில் என்பிஆர் குறித்த அனைத்து செய்திகளையும் நீக்கம் செய்துவிட்டு, 1948ஆம் ஆண்டு தேசிய மக்கள் தொகையோடு சென்செஸ் செய்தால், நாங்கள் ஒத்துழைக்கத் தயார் என்று கூறியுள்ளோம்.

ஆனால் குடியுரிமை சட்டம் 1955ஆம் ஆண்டின் அடிப்படையில் எடுக்கக்கூடியதாக இருந்தால், இந்தியாவின் பொதுவான மக்களும் ஒத்துழைக்க மாட்டோம் என்று தலைமைச் செயலாளர் முன்பு தெரிவித்துள்ளோம்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் வரை, எங்களது போராட்டம் தொடரும்' எனக் கூறினார்.

இந்த சமூக நல்லிணக்க பொதுக்கூட்டத்தில் பச்சை தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார்,ஜெகத்கஸ்பார், திமுக ஒன்றியச் செயலாளர் தாமரைபாரதி மற்றும் கன்னியாகுமரி பங்கு பேரவை நிர்வாகிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

அப்போது இஸ்லாமியப் பெண்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க:

சிஏஏ தொடர்பாக தலைமை செயலர், இஸ்லாமிய பிரதிநிதிகளுடன் ஆலோசனை!

For All Latest Updates

TAGGED:

Muslim

ABOUT THE AUTHOR

...view details