கன்னியாகுமரி மாவட்ட நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகி ஒருவர் தனக்கு சாதகமான ஆள்களுக்கு முக்கிய பொறுப்புகளை கொடுத்து கட்சி வளர்ச்சிக்காக தீவிரமாக பணியாற்றியவர்களை ஓரம் கட்டி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தலைமை தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்து வருவதாகவும், பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளருக்கு எட்டு பேர் விருப்ப மனு கொடுத்த நிலையில் கட்சி தலைமைக்கு காட்டாமல் மாநில நிர்வாகி தனது ஆதரவாளர் ஒருவருக்கு வாய்ப்பு தந்ததாகவும் நாம் தமிழர் கட்சியினர் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி பத்மநாபபுரம் தொகுதி தலைவர் அகமது கபீர் தலைமையில் வேர்கிளம்பி பகுதியில் உள்ள தொகுதி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பத்மநாபபுரம் தொகுதியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நாம் தமிழரை விட்டு வெளியேறுவதாக முடிவெடுத்துள்ளனர்.