தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெருஞ்சாணி அணை திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கன்னியாகுமரி: பெருஞ்சாணி அணையில் இருந்து விநாடிக்கு ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை!
வெள்ள அபாய எச்சரிக்கை!

By

Published : Oct 15, 2020, 7:50 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஏற்கனவே மாவட்டத்திலுள்ள பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத்துறையாறு அணைகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று(அக்.15) பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் தலா இரண்டு அடி தண்ணீர் ஒரே நாளில் உயர்ந்துள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் இன்று(அக்.15) 42.60 அடி தண்ணீர் எட்டியுள்ள நிலையில் தாமிரபரணி ஆற்றின் கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல பெருஞ்சாணி அணைக்கு 2,020 கனஅடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து பெருஞ்சாணி அணையில் இருந்தது விநாடிக்கு ஆயிரம் கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து பெருஞ்சாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான வலியாற்றும், மாத்தூர், திருவட்டார், திக்குறிச்சி‌, மூவாற்றுமுகம், கணபதியான்கடவு ஆகிய பகுதிகளில் அதிகமாக வெள்ளம் வரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு வசிக்கும் மக்களை கரையோர பகுதிகளுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அமமுக பொருளாளர் வெற்றிவேல் காலமானார்!

ABOUT THE AUTHOR

...view details