தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கை கால்களை கழுவினால் மட்டுமே அனுமதி - முன்மாதிரி கிராமம்.! - அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட வாரியூர் என்ற கிராமத்தில் நுழையும் அனைவரும் கட்டாயம் கை கால்களை கழுவ வேண்டும்

கன்னியாகுமரி: கிராமத்திற்குள் நுழையும் அனைவரும் கட்டாயம் கை கால்களை கழுவிய பிறகே நுழையவேண்டும் என ஊர்மக்கள் முடிவெடுத்துள்ளனர். அதன்படி ஊருக்குள் நுழையும் யாராக இருந்தாலும் கை கால்களை கழுவிய பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

கை கால்களை கழுவினால் மட்டுமே கிராமத்திற்குள் அனுமதி
கை கால்களை கழுவினால் மட்டுமே கிராமத்திற்குள் அனுமதி

By

Published : Mar 25, 2020, 7:41 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. பொதுமக்கள் யாரும் வெளியே வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதே போல பொதுமக்கள் கட்டாயம் கை கால்களை கழுவ வேண்டும், வெளியே போகும் அவசியம் ஏற்பட்டால் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட வாரியூர் என்ற கிராமத்தில் நுழையும் அனைவரும் கட்டாயம் கை கால்களை கழுவிக்கொண்டு தான் நுழைய வேண்டும் என்று முடிவெடுத்துள்ளனர்.

அதன்படி ஊருக்குள் செல்லும் முக்கியப் பாதையில் யாரும் செல்ல முடியாதபடி தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர். இந்த தடுப்பின் அருகில் பெரிய தொட்டியில் வேப்பிலை மஞ்சள் கரைசல் உள்ள தண்ணீரை வைத்துள்ளனர். மேலும் கை கழுவுவதற்காக டெட்டால் உள்ளிட்ட கிரிமிநாசினி பொருள்களும் உள்ளன.

கிராமத்திற்குள் நுழையும் அனைவரும் கட்டாயம் கை கால்களை கழுவ வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை

ஊருக்குள் நுழையும் அனைவரையும் கை கால்களை கழுவிய பிறகே ஊருக்குள் நுழைய அனுமதிக்கின்றனர். ஊர் மக்களின் இந்த செயலுக்கு போலீசார் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:

ஊரடங்கு உத்தரவு: வெளியில் சுற்றுபவர்கள் மீது தடியடி

ABOUT THE AUTHOR

...view details