கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தல் மற்றும் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் 68.80% வாக்குகள் பதிவாகியுள்ளன. மாவட்டம் முழுவதும் உள்ள 2,243 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு, மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கபட்டுள்ளன.
மூன்றடுக்கு பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்!
கன்னியாகுமரி: மக்களவை இடைத்தேர்தல் மற்றும் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
evm
துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் இரவு பகலாக சுழற்சி முறையில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கூடுதல் பாதுகப்புக்காக வெப் கேமராக்கள் வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. கோபுரங்கள் அமைக்கபட்டு அதிலும் காவலர்கள் கண்காணிப்புப் பணிகளில் உள்ளனர். அதன்படி, கோணத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி இன்று முதல் முழுமையாக காவல்துறையினர் கட்டுப்பாட்டில் கொண்டுவரபட்டுள்ளது.
இதையும் படிங்க: 'சீல் வைத்த வாக்குப் பெட்டிகள் உடைப்பு' - பொதுமக்கள் போராட்டம்