தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி மும்முரம்! - tn election 2021

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல்கட்டமாக நாகர்கோவில தொகுதிக்கு இயந்திரங்கள் அனுப்பப்பட்டன.

voting-machines-distribution-to-kumari-constituencies
voting-machines-distribution-to-kumari-constituencies

By

Published : Mar 8, 2021, 12:34 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், பத்மநாபபுரம், குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய 6 சட்டப் பேரைவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்படுள்ளன. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு தொகுதிக்கும் 20 விழுக்காடு இயந்திரங்கள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யபட்டன.

வாக்குப் பதிவு இயந்திரங்கள்

அதன்படி, முதல்கட்டமாக நாகர்கோவில் தொகுதிக்கு 390 வாக்கு சாவடிகளுக்கு 466 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 494 விவிபேட் இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் எனப் பிரிக்கப்பட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அவற்றை அலுவலர்கள் அறையில் பாதுகாப்பாக வைத்து சீல் வைத்தனர். மீதமுள்ள 5 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுழற்சி முறையில் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க:வாக்கு இயந்திரங்கள் வைக்கும் மையத்தை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்!

ABOUT THE AUTHOR

...view details