தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரியில் வாக்குப்பதிவு இயந்திரம் திருட்டு : அரசியல் கட்சியினர் புகார்! - Kanyakumari District News

கன்னியாகுமரி: திங்கள் நகரில் வைக்கப்பட்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தெரியாமல் ரகசியமாக அலுவலர்கள் கடத்தியதாக அரசியல் கட்சியினர் புகார் தெரிவித்தனர்.

குமரியில் வாக்குப்பதிவு இயந்திரம் திருட்டு
குமரியில் வாக்குப்பதிவு இயந்திரம் திருட்டு

By

Published : Oct 21, 2020, 7:10 PM IST

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்காக விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகருக்கு கொண்டுவரப்பட்டது.

பின்னர் அங்கு அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்திற்குள் உள்ள பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வரப்பட்ட இயந்திரங்களில் ஏற்கனவே பதிவான வாக்குகளை அழிக்கும் பணி மற்றும் பழுதான இயந்திரங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்றது. இந்த பணியில் திருச்சி பெல் நிறுவன பொறியாளர்கள் மற்றும் மாவட்ட அரசு அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இப்பணிகள் நடைபெற்றன.

இந்நிலையில், இங்கிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை அலுவலர்கள் ரகசியமாக வெளியே கொண்டு சென்றதாக தெரிகிறது. இதையறிந்த காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேஷ்குமார் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த வளாகத்தை முற்றுகையிட்டனர்.

காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் கட்சியினர்
இதைக் தொடர்ந்து இரணியல் காவல்துறையினர் அரசியல் கட்சியினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர். இது தொடர்பாக கிள்ளியூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேஷ்குமார் கூறுகையில், ’அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை சரி செய்து தயாராக வைத்துள்ளனர். இந்நிலையில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டுச் சென்றது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது’ என்றார்.

ABOUT THE AUTHOR

...view details