இது தொடர்பாக குமரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் துணை ஆட்சியர்களுக்கு நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் தற்போது கரோனா வைரசால் ஐந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இத்தொற்று மேலும் பரவாமல் இருக்க மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்.
குமரி மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று தடுப்பு பணியில் ஈடுபட ஆர்வம் உடைய நல்ல உடல் நிலையில் உள்ள செவிலியர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தங்களுடைய முழு விவரத்தினையும் 956671011 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.