கன்னியாகுமரி: மார்த்தாண்டம் அருகே சிராயன்குழி பகுதியில் இன்று(அக். 7) அரசுப்பேருந்து ஒன்று பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றும் நேரத்தில், அந்தப்பகுதியில் மது போதை உச்ச கட்டத்தில் இருந்த மதுப்பிரியர் ஒருவன், அவனது இரண்டு கைகளில் கற்களைக்கொண்டு பேருந்தை மிரட்டியுள்ளார்.
பட்டப்பகலில் ரோட்டில் கற்களைக் காட்டி மிரட்டிய இளைஞரால் பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர். தகவல் அறிந்து காவல்துறையினர் வருவதைப் பார்த்த போதை இளைஞர் தப்பிச்சென்றுவிட்டார். சிசிடிவி காட்சிகளை சேகரித்த காவல்துறையினர் போதை இளைஞரைத்தேடி வருகின்றனர். காவல்துறையினரின் ரோந்து மற்றும் கண்காணிப்புப்பணிகள் போதுமான அளவு இல்லாததே, இது போன்ற குற்றங்கள் நடந்து வருவதற்கு முக்கிய காரணம் என பயணிகள் குற்றச்சாட்டினை முன்வைத்தனர்.