தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விதவிதமான வடிவங்களில் அருளும் விநாயகர்

கன்னியாகுமரி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விதவிதமான வடிவங்களில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

விதவிதமான வடிவங்களில் அருளும் விநாயகர்

By

Published : Aug 29, 2019, 4:56 PM IST

இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 2ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவிலில் 5,000க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

விதவிதமான வடிவங்களில் அருளும் விநாயகர்

சுற்றுப்புறச் சூழலுக்கு கேடு ஏற்படுத்தாத வகையில் தயாரிக்கப்படும் இச்சிலைகளை பிரதிஷ்டை செய்த மூன்று நாட்களுக்கு பின்னர் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.

கால் அடி முதல் ஒன்பதரை அடி வரையிலான இச்சிலைகள் பாம்பு பிள்ளையார், அன்ன வாகன பிள்ளையார், அரக்கனை பிடிக்கும் பிள்ளையார் என மாறுபட்ட வடிவங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details