தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விநாயகர் சதுர்த்தி சிறப்பு மலர் சந்தை! - விநாயகர் சதுர்த்தி சிறப்பு மலர் சந்தை

கன்னியாகுமரி : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தோவாளையில் சிறப்பு மலர் சந்தை நடைபெற்றுவருகிறது

விநாயகர் சதுர்த்தி சிறப்பு மலர் சந்தை

By

Published : Sep 2, 2019, 12:03 AM IST

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கன்னியாகுமரியில் உள்ள தோவாளை பூமார்கெட்டுக்கு மலர்களின் வரத்து அதிகரித்துள்ளது. திண்டுக்கல், மதுரை, ஓசூர் ஆகிய வெளி மாவட்டங்களில் இருந்து மொத்தம் 15 டன் பூக்கள் வரவைக்கப்பட்டுள்ளன .

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மக்களுக்கு பூக்களின் தேவை அதிகமாக உள்ள நிலையில் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது . பிச்சி மல்லிகை பூக்கள் கிலோ ரூ.1000த்திற்கும் , சம்பங்கி கிலோ ரூ.500க்கும்,ரோஜா ரூ.200க்கும் , அருகம்புல் ரூ. 60திற்கும் விற்கப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி சிறப்பு மலர் சந்தை

பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ள போதிலும் அதிகாலை முதலே பொதுமக்கள் அதிகம் பூக்கள் வாங்கி செல்கின்றனர். இந்த விலை உயர்வால் தோவாளை மலர்ச் சந்தை பூ வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

For All Latest Updates

TAGGED:

Flower

ABOUT THE AUTHOR

...view details