கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் முகத்துவாரத்தில் ஏற்பட்ட பல்வேறு விபத்துகளில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில் நேற்று நடந்த விபத்தில் பூத்துறை பகுதியைச் சார்ந்த பிரடி என்ற பெரின் (36) மாயமானார். அவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்த மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இனையம் மண்டலத்தைச் சார்ந்த ஏழு மீனவ கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி துறைமுக நுழைவுவாயில் பகுதியில் இருந்து மௌன ஊர்வலமாக சென்றனர். பின்னர், மீன்பிடி துறைமுகத்தின் உட்பகுதியில் இறந்த ஐந்து மீனவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி, மலர் தூவி மரியாதை செய்தனர்.