கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே புத்திரி பகுதியில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிநீருக்கும், பாசனத்திற்கும் ஒரு குளத்தயே நம்பி இருந்தனர். அந்த குளத்திற்கு தண்ணீர் வரும் அரசடி கால்வாயை நெடுஞ்சாலை துறையினர் நான்கு வழி சாலை திட்ட பணிகளுகாக மூடினர். இதனால் குளத்திற்கு நீர் வருவது தடைபட்டு குளம் முழுமையாக வரண்டு போனது.
நெடுஞ்சாலைத்துறைக்கு எதிராக கிராம மக்கள் போர்கொடி! - குடிநீர் பிரச்சனை
கன்னியாகுமரி: புத்திரி மக்கள் குடிநீருக்கு பயன்படுத்தி வந்த குளத்தின் கால்வாயை நெடுஞ்சாலைத் துறையினர் மூடியதை கண்டித்து ஜூன் 11ஆம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
கிராம மக்கள் போர்கொடி
இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் ஊர் மக்கள் சென்று மனு கொடுத்ததும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைமந்த புத்திரி கிராம மக்கள் நெடுஞ்சாலை துறையை கண்டித்தும், மூடிய அரசடி கால்வாயை திறந்து விட கோரியும் ஜீன் 11ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் செய்யப்போவதாக ஊர் மக்கள் சார்பில் நடைபெற்ற ஊர் கூட்டத்தில் முடிவு செய்தனர்.