தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தடையை மீறிய மீன் வலை தயாரிப்பு நிறுவனம்: அலுவலர்கள் ஆய்வு! - கன்னியாகுமரி மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளில் மீன் வலை தயாறிப்பு நிறுவனங்கள் செயல்படுவதாக வந்தத் தகவலை அடுத்து அரசு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

மீன் வலை தயாரிப்பு நிறுவனத்தை ஆய்வு செய்த அலுவலர்கள்
மீன் வலை தயாரிப்பு நிறுவனத்தை ஆய்வு செய்த அலுவலர்கள்

By

Published : Apr 30, 2020, 3:12 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் மாவட்டத்தில் உள்ள அத்தியாவசியக் கடைகளைத் தவிர அனைத்துக் கடைகளும், தொழில் நிறுவனங்களும், அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன.

எனினும் கன்னியாகுமரி மாவட்டத்தில் சில இடங்களில் அரசின் கட்டுப்பாட்டை மீறி மறைமுகமாக சில தொழில் நிறுவனங்கள் நடைபெற்றுவருவதாக ஏராளமான புகார்கள் காவல் துறையினருக்கும், அரசு அலுவலர்களுக்கும் புகார் வந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில் குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த அனந்தநாடார் குடியிருப்பு, எரும்புக்காடு பகுதிகளில் உள்ள மீன் வலை நிறுவனங்கள் செயல்படுவதாக அரசு அலுவலர்களுக்கு ரகசிய தகவல் வந்தது.

இதன் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் திகாரி ஷிபுகுமார் தலைமையிலான அலுவலர்கள் அப்பகுதியிலுள்ள மீன் வலை தயாரிப்பு நிறுவனங்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

மீன் வலை தயாரிப்பு நிறுவனத்தை ஆய்வு செய்த அலுவலர்கள்

அரசின் உத்தரவை மீறி தொழில் நிறுவனங்கள் செயல்படுவது கண்டறியப்பட்டால் அந்த நிறுவனங்கள் பூட்டி சீல் வைக்கப்படும் என அலுவலர்கள் எச்சரித்தனர்.

இதையும் படிங்க: தடையை மீறி செயல்பட்ட வங்கி - அலுவலர்களுடன் வைத்துப் பூட்டி வங்கிக்கு சீல்

ABOUT THE AUTHOR

...view details