தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு: சைக்கிள் பேரணி செல்ல முயன்ற எம்பி கைது - சைக்கிள் பேரணி

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தடையை மீறி சைக்கிள் பேரணி செல்ல முயன்ற மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் கைதுசெய்யப்பட்டார்.

Vijay vasanth mp
விஜய் வசந்த் எம்.பி

By

Published : Jul 12, 2021, 4:51 PM IST

கன்னியாகுமரி: காங்கிரஸ் சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, நாகர்கோவிலில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் டெரிக் சந்திப்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் தொடங்கிவைத்தார்.

சைக்கிள் பேரணி செல்ல முயன்ற எம்பி கைது

காவல் துறையினர் இந்தச் சைக்கிள் பேரணிக்கு அனுமதி மறுத்த நிலையில், பேரணி செல்ல முயன்ற மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுசெய்யப்பட்டனர்.

சைக்கிள் பேரணி சென்ற எம்பி விஜய் வசந்த்

இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் விலை உயர்வு - மாட்டு வண்டியில் பயணம் செய்த எம்பி

ABOUT THE AUTHOR

...view details