கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டப்பேரவை தொகுதியில் மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளரும் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினருமான சுரேஷ் ராஜன் நாகர்கோவில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். அங்கு, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் தற்போது போட்டியிடும் விஜய் வசந்த் வந்திருந்தார்.
அதே சமயத்தில் நாகர்கோவில் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் பாஜக -அதிமுக கூட்டணி வேட்பாளர் எம்ஆர் காந்தியும் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தார். அவருடன், முன்னாள் மத்திய இணை அமைச்சரும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான பொன். ராதாகிருஷ்ணன் வருகை தந்திருந்தார்.