தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பணிகள் முடிவடையாமலேயே டோல்கேட் அமைத்து கட்டணம் வசூலிக்க திட்டம் - எம்பி விஜய்வசந்த் - toll gate

கன்னியாகுமரியில் நான்கு வழிச்சாலை பணிகள் முடிவடையாமலேயே டோல்கேட் அமைத்து கட்டணம் வசூல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் எம்பி விஜய்வசந்த் குற்றச்சாட்டியுள்ளார்.

பணிகள் முடியாமல் டோல் கேட் அமைத்து வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல்
பணிகள் முடியாமல் டோல் கேட் அமைத்து வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல்

By

Published : Sep 19, 2022, 12:24 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி-களியக்காவிளை இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் 60 விழுக்காடு முடிந்துவிட்டன. டோல்கேட் அமைக்கும் பணியும் முடியும் தருவாயில் உள்ளது. இதனிடையே பல மாதங்களாக பணிகள் கிடப்பில் போடப்பட்டன. தற்போது மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி விஜய்வசந்த் அந்த பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

பணிகள் முடியாமல் டோல் கேட் அமைத்து வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல்

அப்போது அவர், "மணல் இல்லை, கல் இல்லை என்று கிடப்பில் போடப்பட்ட பணிகள். 2024 நாடாளுமன்ற தேர்தல் வருவதால் நடந்துவருகிறது. குறிப்பாக டோல்கேட் அமைக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. மாவட்டம் முழுவதும் நான்கு வழிச்சாலை பணிகள் முழுவதும் முடிவடையாமலேயே இந்த டோல்கேட் மூலம் வாகன ஓட்டிகளிடம் பணம் வசூல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அனைத்து பணிகளும் முடிந்த பின்பே இந்த டோல்கேட் திறக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:அதிமுகவை அழிப்பதற்கென்றே ஈபிஎஸ் ஒரு சூனியமாக வந்துள்ளார் - கோவை செல்வராஜ்

ABOUT THE AUTHOR

...view details