கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்தடை உத்தரவால் தினக் கூலி தொழிலாளர்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். இவ்வாறு தவிக்கும் மக்களுக்கு பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.
ஏழை மக்களுக்கு உதவி செய்த விஜய் ரசிகர்கள்! - கோவிட்-19
கன்னியாகுமரி: உணவின்றி தவித்த மக்களுக்கு, விஜய் மக்கள் இயக்க இளைஞர் அணி சார்பில் நலதிட்ட உதவிகள் செய்யப்பட்டன.
![ஏழை மக்களுக்கு உதவி செய்த விஜய் ரசிகர்கள்! ஏழை மக்களுக்கு உதவி செய்த விஜய் ரசிகர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7017584-thumbnail-3x2-kanya.jpg)
ஏழை மக்களுக்கு உதவி செய்த விஜய் ரசிகர்கள்
ஏழை மக்களுக்கு உதவி செய்த விஜய் ரசிகர்கள்
இந்நிலையில் குமரி மாவட்டத்தில், விஜய் மக்கள் இயக்க இளைஞர் அணி சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அம்மாவட்டத்தில் உள்ள வட்டவிளை, என்ஜிஓ காலனி, மணிக்கெட்டிபொட்டல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏழை குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அரிசி, மளிகை சாமான்கள், காய்கறிகள் ஆகியவை வழங்கப்பட்டன. இவர்களின் சேவையை அக்கிராம மக்கள் அனைவரும் பாராட்டியுள்ளனர்.
இதையும் படிங்க:கர்ப்பிணி பெண்ணுக்கு உதவிய விஜய் மக்கள் இயக்கம்