நவராத்திரி விழாவின் பத்தாவது நாள் விஜயதசமி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் குழந்தைகளுக்கான கல்வியை தொடங்கும் வகையிலான விதியாரம்பம் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சரஸ்வதி தேவி கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
விஜயதசமி நாளில் கோயில்களில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி! - விஜயதசமி நாளில் கோயில்களில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சி
கன்னியாகுமரி: விஜயதசமியை முன்னிட்டு சரஸ்வதி தேவி கோயில்களில் குழந்தைகளின் ஆரம்பக் கல்விக்கான விதியாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
vijayadashami
நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள ஸ்ரீ வனமாளீஸ்வரா கோயில் சரஸ்வதி சன்னிதானத்தில் தங்க ஊசிகளைக் கொண்டு குழந்தைகளின் நாவில் ‘ஓம்’ என எழுதியும், அரிசியில் அ, அம்மா, அப்பா என எழுதவைத்தும் குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுக்கப்பட்டது. இதில் ஏராளமான பெற்றோர் தங்களின் குழந்தைகளோடு கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: பரிவேட்டையை முன்னிட்டு குமரியில் படகுகள் நிறுத்தம்!