கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காகன் வந்து செல்கின்றனர். இங்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அழைத்து செல்வதற்காக பயன்படுத்தும் வீல் சேரில், அங்குள்ள ஊழியர்கள் குப்பைகளை வைத்து எடுத்து செல்கின்றனர்.
வீடியோ: நோயாளிகளுடைய வீல் சேரில் குப்பைகளை கொண்டு செல்லும் ஊழியர் - நோயாளிகளின் வீல் சேரில்
கன்னியாகுமரி அருகே தக்கலையில் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கான வீல் சேரில், குப்பைகளை வைத்து தள்ளிச் செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது.
Etv Bharat
இதனால் அங்கு செல்லும் நோயாளிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மத்திய அரசின் தூய்மை மருத்துவமனைக்கான 'காயகல்ப் விருது' பெற்ற தக்கலை அரசு மருத்துவமனையில் பணியாற்றக்கூடிய ஊழியர்களின் இத்தகைய அலட்சியப் போக்கு செயல்படுவது வருந்தத்தக்கதும் கண்டிக்கத்தக்கதும் ஆகும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: திருவள்ளூரில் ரூ.182 கோடி செலவில் கட்டப்பட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை திறப்பு