"ஏய் போடா.." பயணிகளை ஒருமையில் பேசிய ரயில்வே ஊழியர்! நாகர்கோவில்:குமரி மாவட்டம்தமிழ்நாட்டுடன் இணைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் இங்குள்ள நாகர்கோவில் ரயில்வே இன்னும் கேரளா கோட்டத்துடன் இருப்பதால் தமிழ்நாட்டுடன் இணைக்க பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இங்கு பல போராட்டங்கள் நடைபெற்றுள்ளன இருந்தும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வருகிறது.
இதனால் இரு மாநில எல்லையில் உள்ள ரயில்வே நிலையங்களில் தமிழ்நாடு பயணிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாகர்கோவிலில் உள்ள ரயில்வே கவுண்டர்களில் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊழியர்கள் யாரும் நியமிக்கப்படுவது இல்லை எனவும், கேரளா உள்ளிட்ட பிற மொழியில் உள்ளவர்களே பணிபுரிந்து வருகின்றனர்.
அதுவும் டிக்கெட் கவுண்டரில் பணியாற்றுவதால் பயணிகள் கேட்கும் விவரங்களுக்குச் சரியான பதில் கூற முடியாமல் பயணிகளிடம் சில நேரங்களில் அவர்கள் மொழி தெரியாமல் அநாகரிகமாக மாற்று மொழியில் பேசுவதால் தொடர்ந்து தமிழ்நாடு ரயில் பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாகர்கோவிலில் இன்று ரயிலில் டிக்கெட் எடுக்க வந்த பயணி ஒருவர் கவுண்டரிலிருந்த ஊழியரிடம் விவரம் கேட்கும்போது அவர் விவரத்தைச் சரியாக சொல்லாமல் ரயில் பயணியை அலட்சியமாக
அவர் நடத்தியதால் இரு தரப்பிலும் மோதல் ஏற்படும் சூழலை உருவானது.
மேலும், மாற்று மொழியில் அவர் அநாகரிகமாகப் பேசியதை மொழி தெரியாவிட்டாலும் அவர் கண், உடல் அசைவதை வைத்து புரிந்து கொண்ட ரயில் பயணிகள் ரயில்வே நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். இதனால் கவுண்டரில் இருவருக்கும் இடையே மோதும் சூழ்நிலை ஏற்பட்டது.
அதன் பின்னர், பயணிகள் அனைவரும் சேர்ந்து குரல் கொடுத்ததால் சம்பந்தப்பட்ட ரயில்வே நிலையம் கவுண்டரில் இருந்த மாற்றுமொழி டிக்கெட் கொடுக்கும் பணியாளர் ரயில் பயணிகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மொழி தெரியாமல் தப்பி ஓடும் வீடியோ சமூக வலை தலங்களில் வைரலாகி வருகிறது
இதையும் படிங்க:கல்லூரி மாணவரை வெட்டிய 5 பேர் கொண்ட கும்பல்.. சென்னையில் பயங்கரம்!