கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடு புகுந்து தாக்குவது, சாலையில் செல்வோர்களை அத்துமீறி தாக்குவது, கடையில் பணிபுரிபவர்களை உள்ளே புகுந்து தாக்குவது போன்ற அத்துமீறல் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன. காவல்துறை ரோந்துப் பணியில் ஏற்பட்டுள்ள தொய்வே, இது போன்ற குற்றச்சம்பவங்களுக்கு காரணம் எனப் பரவலான ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
அந்த வகையில், நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியில் செயல்பட்டு வரும் முடி திருத்தும் கடையில் பணியாற்றிக்கொண்டிருந்த ஊழியரை திடீரென மது போதையில் வந்த நபர், கன்னத்தில் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.