கன்னியாகுமரி:முட்டம் மீன்பிடி தூறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகு கடலில் மூழ்கி விபத்து காரணமாக கடலில் தத்தளித்த 19 மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில்,படகு கடலில் மூழ்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
முட்டம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் கில்பர்ட் இவருக்கு சொந்தமான "விண்ணேற்பு மாதா" என்ற விசைப்படகில் முட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஓட்டுனர் மதன் தலைமையில் கடந்த 22ஆம் தேதி குமரி மாவட்ட மீனவர்கள் 12 பேர் மற்றும் வட மாநிலத்தை சேர்ந்த மீனவர்கள் 7 பேர் என 19 பேர் ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு சென்றுள்ளனர்.
விசைப்படகானது 50 கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் 24-ம் தேதி சனிக்கிழமை அதிகாலை மீன்பிடித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக எழுந்த கடல் அலையில் சிக்கி விபத்துக்குள்ளாகி மூழ்க தொடங்கியுள்ளது.விசைப்படகில் இருந்த 19 மீனவர்களும் தண்ணீரில் தத்தளித்தபடி இருந்தனர்.