தமிழ்நாடு

tamil nadu

காவல் நிலையத்தில் நின்றிந்த வாகனங்களில் தீ

கன்னியாகுமரி: குமரி காவல் நிலையத்தில் நின்ற வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததில் சில வாகனங்கள் சாம்பலாகின. இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

By

Published : Jun 18, 2021, 4:40 PM IST

Published : Jun 18, 2021, 4:40 PM IST

குமரி காவல் நிலையத்தில் தீ விபத்து
குமரி காவல் நிலையத்தில் தீ விபத்து

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் காவல் நிலையம் ஒன்று உள்ளது. இந்தக் காவல் நிலையத்தில் கரோனா ஊரடங்கு காலத்தில் அரசின் கட்டுப்பாடுகளை மீறி சென்ற வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டு காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலையில் திடீரென வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவல் நிலைய பெண் காவலர் உஷா, இது குறித்து கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன், ஆய்வாளர் ஆவுடையப்பன் ஆகியோருக்குத் தகவல் கொடுத்தார்.

இத்தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மளமளவென எரிந்தத் தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். அதற்குள் அங்கு நின்று ஆட்டோக்கள், பைக்குகள் சில எரிந்து சாம்பலாகின.

விசாரணையில், கன்னியாகுமரியில் சுற்றித் திரியும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இந்தத் தீயை வைத்திருக்கக் கூடும் எனத் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல் துறையினர் ஆய்வுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details