கன்னியாகுமரி: மதுரையில் இருந்து நாகர்கோவில் அருகே உள்ள அப்டா காய்கறி சந்தைக்கு காய்கறிகள் ஏற்றிக்கொண்டு டெம்போ ஒன்று வந்தது. அதனை கொட்டாரம் பகுதியை சேர்ந்த பொம்மி (48) என்பவர் ஓட்டி வந்தார். அந்த வண்டி, குமரி மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழி சோதனை சாவடி அருகே வேகமாக வந்து கொண்டிருந்தது. சோதனை சாவடியில், வாகன சோதனைக்காக வண்டியை நிறுத்த ஓட்டுநர் முயற்சி செய்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டெம்போ, சாலையோரத்தில் இருந்த உயர் மின் அழுத்த கம்பத்தில் மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மின்கம்பம் முற்றிலும் சேதமடைந்தது.
விபத்துகுறித்து தகவல் அறிந்து வந்த நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினர், டெம்போவின் அடியில் சிக்கிய ஓட்டுநரையும், க்ளீனரையும் பத்திரமாக மீட்டனர்.