தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் காய்கறி சந்தை - சமூக இடைவெளியை கடைபிடித்த மக்கள் - Vegetable shop in Kanyakumari community space

கன்னியாகுமரி: வடசேரி பகுதியில் உள்ள கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சந்தையில் பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு வரிசையில் நின்று காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.

சமூக இடைவெளியை கடைபிடித்த மக்கள்
சமூக இடைவெளியை கடைபிடித்த மக்கள்

By

Published : Apr 15, 2020, 5:12 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பகுதியில் காய்கறி சந்தை செயல்பட்டுவருகிறது. கரோனா வைரஸ் தொற்று காரணமாக அப்பகுதியில் செயல்பட்டுவந்த சந்தையை அதே பகுதியில் உள்ள கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்திற்கு மாநகராட்சி நிர்வாகத்தால் மாற்றப்பட்டது.

இதில் ஏராளமான வியாபாரிகள் தற்காலிக கடை அமைத்து காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்றுடன் 144 தடை உத்தரவு நிறைவடையும் என்று பொதுமக்கள் நம்பியிருந்தனர். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி இதனை மே 3ஆம் தேதி வரை நீட்டித்து அறிவித்தார்.

சமூக இடைவெளியை கடைபிடித்த மக்கள்

தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்கி இருப்பு வைக்க ஆரம்பித்துள்ளனர். தற்போது பேருந்து நிலையத்தில் மாற்றியமைக்கப்பட்ட தற்காலிக சந்தையில் ஏராளமான பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு வரிசையில் நின்று காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.

இதையும் படிங்க: அத்தியாவசியப் பொருள்கள் வாங்க கூட்டம் கூட்டமாக வரும் பொதுமக்கள்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details