கன்னியாகுமரி: நவராத்திரி விழாவை முன்னிட்டு தற்போது அசைவ உணவுகள் தவிர்க்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் அனைவாரும் காய்கறிகளை அதிகம் வாங்கி வருகின்றனர். மேலும் கோயில்களில் நவராத்திரியை முன்னிட்டு, தினசரி அன்னதானம் வழங்கப்பட்டு வருவதால் காய்கறிகள் தேவை அதிகரித்துள்ளது. அதனால் சந்தைகளில் காய்கறிகளின் விலை ஏற்றப்பட்டுள்ளது.
திண்டுக்கல், தேனி, நீலகிரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் அண்மையில் பெய்த தொடர் மழையால் உற்பத்தி குறைந்து வருவதன் காரணமாக அனைத்து காய்கறிகளும் மூன்று மடங்குக்கு மேல் விலை உயர்ந்து உள்ளதாக கூறபடுகிறது. கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட கேரட் தற்போது 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.