தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

24 வகையான காய்கறிகள் ரூ.160 : பொதுமக்கள் வரவேற்பு - குமரி மாவட்டச் செய்திகள்

கன்னியாகுமரி: மருங்கூர் பேரூராட்சியில் 24 வகையான காய்கறிகள் ரூ. 160க்கு வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

vegetable
vegetable

By

Published : Apr 7, 2020, 4:13 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில், கரோனா அச்சம் காரணமாக தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துவருகின்றனர்.

இதன் காரணமாக பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த பேரூராட்சி அலுவலர்கள் பொதுமக்களுக்கு எளிதாக காய்கறிகள் கிடைக்க வழிவகை செய்ய திட்டமிட்டனர்.

24 வகையான காய்கறிகள் ரூ.160

அதன்படி மருங்கூர் பேரூராட்சி சார்பில், ரூபாய் 160க்கு 24 வகையான காய்கறிகள் கொண்ட பையை தயாரித்து பேரூராட்சி வாகனத்தில் சென்று வீடு வீடாக வழங்கி வருகின்றனர். இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details