தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகர்கோவில் அருகே விசிக நிர்வாகி வெட்டி படுகொலை - VCK cadre brutally murdered

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே விடுதலைக் கட்சி நிர்வாகியை ஓட ஓட வெட்டி படுகொலை செய்த அடையாளம் தெரியாத நபர்களை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.

murder

By

Published : Aug 6, 2019, 6:10 AM IST

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த பறக்கையைச் சேர்ந்தவர் புஷ்பாகரன்(39). விவசாய கூலி வேலை பார்த்து வரும் இவர் விடுதலைச் சிறுத்தை கட்சியில் ஒன்றிய நிர்வாகியாகவும் உள்ளார். இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்துவந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த சிலர் புஷ்பாகரனை கொலை செய்வதாக மிரட்டிச் சென்றுள்ளனர். இதையடுத்து நேற்று காலையில் புஷ்பாகரன் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக ஓடஓட வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

கொலை நடைபெற்ற இடத்தில் ஆய்வு செய்யும் காவல் துறையினர்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details