தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் 'வசந்தமாளிகை'! ரசிகர்கள் மகிழ்ச்சி - actor sivaji ganesan

கன்னியாகுமரி: நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் 1972ஆம் ஆண்டு வெளிவந்த வசந்தமாளிகை திரைப்படம் மீண்டும் 47 ஆண்டுகள் கழித்து டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் வெளிவந்து ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Vasantha Maaligai

By

Published : Jun 24, 2019, 7:28 AM IST

Updated : Jun 24, 2019, 11:47 AM IST

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1972ஆம் ஆண்டு வெளிவந்த வசந்தமாளிகை திரைப்படம் மீண்டும் 47 ஆண்டுகள் கழித்து கடந்த 21ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் புதிய நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் வெளிவந்துள்ளது.

புதிய நவீன தொழில்நுட்பத்தில் உருவான வசந்தமாளிகை படம் தமிழ்நாட்டில் 150 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.

திரைப்படத்தை காண இருபது வயது இளைஞர்கள் முதல் 80 வயது முதியவர்கள் அதிகம் பேர் திரையரங்குக்கு வருவதால் அதிக வசூல் சாதனை படைத்துவருகிறது.

மீண்டும் வரவேற்பை பெற்ற வசந்தமாளிகை திரைப்படம்!

இதை கொண்டாடும் விதமாக கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோயில் தங்கம் திரையரங்கில் பிரபு ரசிகர் மன்றமும் அவரின் மகன் விக்ரம் பிரபு ரசிகர் மன்றமும் இணைந்து சிவாஜியின் கட்அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்து திரைப்படத்தை பார்க்க வந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

Last Updated : Jun 24, 2019, 11:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details