தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிதி ஒதுக்கியும் சாலை சீரமைப்புப் பணி தொடங்கப்படவில்லை - எம்.பி. வசந்தகுமார் குற்றச்சாட்டு - வசந்தகுமார்

கன்னியாகுமரி: தேசிய நெடுஞ்சாலை சீரமைப்புக்காக 49 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மூன்றாண்டுகள் ஆகியும் இதுவரை பணிகள் தொடங்கவில்லை என கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Vasantha kumar mp press meet  சாலை சீரமைப்பு பணிகள்  நாகர் கோவிலிலிருந்து திருவனந்தபுரம் சாலை  கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர்  வசந்தகுமார்  nagercoil to thiruvananthapuram road
எம்பி வசந்தகுமார்

By

Published : Jan 29, 2020, 7:40 AM IST

கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் செவ்வாய்க்கிழமை நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நாகர்கோவிலிலிருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்புப் பணிக்காக 49 கோடி ரூபாய் நிதியை மூன்று ஆண்டுகளுக்கு முன் அரசு ஒதுக்கீடு செய்தது.

ஆனால் இதுநாள்வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட்டு சாலை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்துவருகின்றனர். இதற்காக ஏற்கனவே போராட்டம் நடத்தியும் பலனில்லை.

எம்.பி. வசந்தகுமார்

எனவே, இது குறித்து மக்களவையில் குரல் கொடுக்கவுள்ளேன். மேலும், காந்தி சாலை முன்பு மத்திய அரசையும் அலுவலர்களையும் கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும். கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வெற்றிபெற்றதால் பாஜக அரசு இந்தத் தொகுதி மக்களைப் புறக்கணிக்கிறது.

மத்திய முன்னாள்அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், வில்சன் கொலைக்கு எம்.பி. உள்பட எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள்தான் காரணம் எனப் படிக்காதவர்போல பேசிவருகிறார்" என்றார்.

இதையும் படிங்க: எதிர்க்கட்சியினர் விளம்பரத்திற்காக போராடுகிறார்கள்: அமைச்சர் குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details