கன்னியாகுமரி மக்களைவை உறுப்பினர் வசந்தகுமாரின் சொந்த ஊரான அகஸ்தீஸ்வரம் பகுதியில் ரேஷன் கடை ஒன்று உள்ளது. இங்கு குறைவாக பொருட்கள் வழங்கப்படுவதாகவும், ஊழியர் தரக்குறைவாக பேசுவதாகவும் புகார் வந்ததையடுத்து ஊழியர் அங்கிருந்து அதிரடியாக மாற்றப்பட்டு புதிய ஊழியர் நியமிக்கப்பட்டார்.
தற்போது ரேஷன் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அகஸ்தீஸ்வரம் ரேசன் கடையில் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் இன்று திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த அரிசி, பொருட்களை ஆய்வு செய்தார்.