தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்குவாதத்தில் ஈடுபட்ட வசந்தகுமார்! - கன்னியாகுமரி

கன்னியாகுமரி : குமரி மக்களவைத் தொகுதியின் வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்தபோது காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

vasanthkuma

By

Published : Apr 18, 2019, 3:26 PM IST

தமிழகத்தில் 38 தொகுதிகாளுக்கான மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளின் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குமரி மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் இன்று காலை அகஸ்தீஸ்வரம் பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் தனது வாக்கினைத் பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து தொகுதி முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட வசந்தகுமார்

அப்போது குமாரபுரம் தோப்பூர் பகுதி பள்ளியில் ஆய்வு மேற்கொண்டபோது வசந்தகுமார் உடன் வந்த நான்கு பேரை போலீஸார் அனுமதிக்க மறுத்தனர். இதனையடுத்து ஒருவரை மட்டும் உடன் அழைத்து சென்று சென்றார். அப்போது போலீஸாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details