குமரி மாவட்டம் நாகர்கோவிலில் வசந்தகுமார் எம்.பி. செய்தியாளர்களிடம் பேசுகையில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்கிணறு பகுதியில் இருந்து களியக்காவிளை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் கன்னியாகுமரியில் இருந்து களியக்காவிளை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பழுதடைந்து வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் பெரும் சிரமம் அடைந்து வருகிறார்கள். இதன் காரணமாக பல்வேறு விபத்துகள் நிகழ்ந்து உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதுகுறித்து மத்திய அரசிடம் பலமுறை தெரிவித்த பிறகும் சாலைகளை செப்பனிட எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மத்திய அரசைக் கண்டித்து மறியல் போராட்டம் - வசந்தகுமார் - congress
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் இருந்து களியக்காவிளை வரையுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. இந்த சாலைகளை சீரமைக்காத மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என வசந்தகுமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.
இதற்கு முக்கிய காரணம் கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்களும், காங்கிரஸ் எம்பி மட்டுமே இருப்பதால் மத்தியில் ஆளும் கட்சிக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் எந்த ஒரு பயனும் இல்லை என்று சாலைகளை செப்பனிட புறக்கணித்து வருகிறார்கள். இதனைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும், களியக்காவிளை பகுதியிலும் நாளை போராட்டம் நடைபெறும். நடவடிக்கை எடுக்க தவறும்பட்சத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.