கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே மிகவும் பிரசித்திப்பெற்ற காணிமடம் யோகிராம் சுரத்குமார் மந்திராலயம் உள்ளது. இங்கு கன்னியாகுமரி மக்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.
இந்நிலையில், கரோனா நோய்த்தொற்று உலகிலிருந்து மறையவும், மக்கள் அனைவரும் இந்தக் கொடிய உயிர்க்கொல்லி நோயின் பிடியிலிருந்து மீளவும் காணிமடம் மந்திராலயத்தில் ”லோக ஷேம யாகம்” உள்பட பல்வேறு சிறப்பு யாகங்கள், வேள்விகளை மந்திராலய குரு நாம ரிஷி பொன் தபஸ்வி காமராஜ் சுவாமிகள் நடத்தினார். மேலும் 48 நாள்கள் மவுன விரதமிருந்து ஒற்றைக்கால் தவத்திலும் அவர் ஈடுபட்டார்.