கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் பொன். ராதாகிருஷ்ணன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் செய்த வளர்ச்சி பணிகளை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்கு சேகரித்து வருகிறேன். ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் சாதி, மத உணர்வுகளை தூண்டும் வகையில் பரப்புரை செய்து வருகிறார்.
வாக்காளர்களுக்கு பணபட்டுவாடா - பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
கன்னியாகுமரி: தேர்தல் விதிமுறைகளை மீறி நாகர்கோவிலில் உள்ள வசந்த் அண்ட் கோ நிறுவனத்தில் வைத்து வாக்காளர்களுக்கு பணபட்டுவாடா நடப்பதாக பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன்
மேலும் நாகர்கோவிலில் இயங்கி வரும் வசந்த் அண்ட் கோ நிறுவனத்தில் உள்ள அனைத்து பொருட்களிலும் வேட்பாளரின் புகைப்படம் இருக்கிறது. இதை தேர்தல் ஆணையம் உடனடியாக அகற்ற வேண்டும். அதே நிறுவனத்தில் வைத்து தான் வாக்காளர்களுக்கு பணபட்டுவாடாவும் நடைபெற்று வருகிறது. காங் கட்சி வேட்பாளர் வசந்தகுமார் வெற்றி பெற்றால் குமரி மாவட்ட இளைஞர்களை கொத்தடிமைகளாக மாற்றி விடுவார். இவ்வாறு அவர் கூறினார்.