தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் தைத் திருவிழா தொடங்கியது

சுவாமிதோப்பு பகுதியில் அமைந்துள்ள அய்யா வைகுண்டசுவாமி தலைமைப்பதியில் தைத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அய்யா வைகுண்டசுவாமி தலைமைப்பதியில் தைத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
அய்யா வைகுண்டசுவாமி தலைமைப்பதியில் தைத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

By

Published : Jan 20, 2023, 11:13 AM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் சுவாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியும் ஒன்று. இந்த பதியில் வருடம்தோறும் ஆவணி, வைகாசி, தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். இந்த வருட தைத்திருவிழா இன்று (ஜனவரி 20) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியை தலைமைப்பதி நிர்வாகி பால ஜனாதிபதி ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், வருகிற 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு அய்யா வெள்ளைக்குதிரை வாகனத்தில் முத்திரிக்கிணற்றங்கரையில் கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வருகிற 30ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

அய்யா வைகுண்டசுவாமி தலைமைப்பதியில் தைத்திருவிழா

கொடியேற்ற நிகழ்ச்சியில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கோரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: கன்னியாகுமரியில் மாட்டுப்பொங்கல் கோலாகலம்

ABOUT THE AUTHOR

...view details