மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒருநாள் சுற்றுப்பயணமாக தனது குடும்பத்தினர் மற்றும் உறவினருடன் கன்னியாகுமரிக்கு இன்று வருகை தந்தார். அவரை முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.
குடும்பத்தினருடன் குமரிக்கு வந்த நிதின் கட்கரி! - Union minister Nitin Gadkari
கன்னியாகுமரி: ஒரு நாள் சுற்றுப்பயணமாக கன்னியாகுமரிக்கு வந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மத்திய அமைச்சர்
பின்னர் அரசினர் விருந்தினர் மாளிகையில் குடும்பத்துடன் தங்கிய அவர், விவேகானந்தர் பாறை, திருவள்ளூவர் சிலை, பகவதி அம்மன் கோயில் உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்த்தார். மத்திய அமைச்சர் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.