தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் தங்கவேல்(47). இவர் சந்தையடியை அடுத்த இடையன்விளையில் கடந்த ஆறு ஆண்டுகளாக பலசரக்குக் கடை நடத்திவருகிறார்.
நேற்று இரவு தங்கவேல் கடையை பூட்டிவிட்டு வீட்டுற்குத் திரும்பிய நிலையில், இன்று கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கடையிலிருந்த 12ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சிகரெட் பொருள்கள், ரூ.57 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து, இச்சம்பவம் குறித்து கன்னியாகுமரி காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார். இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைரேகை நிபுணர்கள் மற்றும் சிசிடிவி கேமிரா உதவியுடன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தொடர் திருட்டுகளை தடுக்க இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்துப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.