தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொறியாளர் வீட்டில் சிக்கிய ரூ.85 லட்சம் கணக்கில் வராத பணம் - வருமானவரித் துறை விசாரணை - பொறியாளர் வீட்டில் சிக்கிய கணக்கில் வராத பணம்

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் அமெரிக்கப் பொறியாளர் ஒருவரின் வீட்டில் வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டதில் 85 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணம் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்றுவருகிறது.

unaccounted money found in engineer house at nagercoil
பொறியாளர் வீட்டில் சிக்கிய ரூ. 85 லட்சம் கணக்கில் வராத பணம்

By

Published : Mar 29, 2021, 2:43 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட கல்வி அலுவலகம் எதிரே மத்திய முன்னாள்இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வீடு உள்ளது. இந்த வீட்டின் அருகே ஜெகநாதன் தெருவில் அமெரிக்காவைச் சேர்ந்த பொறியாளர் ராஜேஷ் என்பவருக்குச் சொந்தமான வீடு உள்ளது.

சமீபத்தில் இவரது மகளுக்குப் பிரமாண்டமான முறையில் திருமணம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வருமானவரித் துறை அலுவலர்கள் இன்று (மார்ச் 29) அதிகாலை அவரது வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு கணக்கில் வராத 85 லட்சம் ரூபாய் சிக்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருமானவரித் துறை அலுவலர்கள் தொடர்ந்து அந்த வீட்டில் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். அத்துடன் கணக்கில் வராத பணம் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: மணப்பாறை அதிமுக வேட்பாளரின் ஓட்டுநர் வீட்டில் ரூ. 1 கோடி பணம் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details