கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே மார்த்தால் பகுதியைச் சேர்ந்தவர் மேரி சுகிலஷீலா (43). இவர் அப்பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரும் இவரது மகன் அஜித் (17) இருவரும் இருசக்கர வாகனத்தில் எட்டாமடை என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது மோசமான நிலையில் காணாப்பட்ட சாலையில் சென்றபோது பெரிய பள்ளத்தில் நிலை தடுமாறி இருசக்கர வாகனம் விழுந்தது. சாலையில் எதிரே வந்த டெம்போ லாரி தாய், மகன் இருவர் மீதும் ஏறி இறங்கியது.
இந்த சம்பவத்தில் தாய் மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூதப்பாண்டி காவல் துறையினர் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இருவரின உடலினையும் உடற்கூறாய்விற்கு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தன்ர்.
இருசக்கர வாகன விபத்து: தாய், மகன் பலி மேலும் இந்த விபத்து நடைபெறுவதற்கு சாலை குண்டும் குழியுமாக இருந்தது தான் காரணம் என்றும், இவ்விபத்துக்கு மாவட்ட நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: செல்போன் கடை உரிமையாளர் மீது தாக்குதல்; வெளியான சிசிடிவி காட்சி