தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரியில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது! - Two robbers arrested in Kanyakumari

கன்னியாகுமரி: தொடர் வழிப்பறி கொள்ளையில் ஈடுப்பட்டு வந்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கன்னியாகுமரியில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது  வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் கைது  வழிப்பறி கொள்ளையர்கள்  Two robbers arrested  Two robbers arrested in Kanyakumari  robbers arrest
Two robbers arrested in Kanyakumari

By

Published : Feb 8, 2021, 11:05 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில், சுற்றுலாத் தலங்களான திரிவேணி சங்கமம், கடற்கரை சாலை, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான விவேகானந்தபுரம் பேரூந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர் வழிப்பறி கொள்ளைகள் நடைப்பெற்று வந்தன.

இது குறித்து வியாபாரிகள், பொதுமக்கள் காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தனர். அதனடிப்படையில், காவல் துறையினர் வழிப்பறி கொள்ளையர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில், சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்து கொண்ட இருவரை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், அஞ்சுகிராமம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்(20), அன்புராஜன்(20) சுற்றுலாதளம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர் வழிப்பறி கொள்ளையில் ஈடுப்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, காவல் துறையினர் இருவரையும் கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:சுங்கச்சாவடி காவலர் அடித்துக் கொலை - வழிப்பறி கொள்ளையர்கள் அட்டூழியம்

ABOUT THE AUTHOR

...view details