தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பணியில் இருந்த காவலரை தாக்கிய இருவர் கைது! - Sankaralingam police kanyakumari

கன்னியாகுமரி: பணியில் இருந்த காவலைரை தாக்கிய இரண்டு பேரை கன்னியாகுமரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

kanyakumari

By

Published : Nov 22, 2019, 7:10 AM IST

சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள், பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதற்காக காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காவலர் சங்கரலிங்கம் என்பவர் தெற்குரத வீதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சகாயவால்ட்டர் (48), ரவீந்திரன் (50) என்ற இருவரும் காவலர் சங்கரலிங்கத்தின் மொபைல் ஃபோனை பறித்துள்ளனர். இதனால் சங்கரலிங்கத்திற்கும் அந்த நபர்களுக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

காவலர் சங்கரலிங்கத்தை தாக்கிய இருவர் கைது

அப்போது ஆத்திரமடைந்த சகாயவால்ட்டரும், ரவீந்திரனும் காவலர் சங்கரலிங்கத்தை தாக்கியதாகத் தெரிகிறது. இதனையடுத்து சங்கரலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் இருவரையும் கைதுசெய்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: குற்றவாளிகளை குறிவைக்கும் சிசிடிவி: சென்னை காவல்துறையின் பலே ஐடியா!

ABOUT THE AUTHOR

...view details