தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரேஷன் அரிசி கடத்திச் சென்ற இருவர் கைது! - kanyakumari district news

கன்னியாகுமாரி: தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு லாரியில் ரேஷன் அரிசி பறிமுதல் செய்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பாஸ்கர்
பாஸ்கர்

By

Published : Oct 3, 2020, 1:59 PM IST

குமரி மாவட்டம் தமிழ்நாடு-கேரள எல்லை பகுதியான பளுகல் பகுதியில் இன்று (அக்.03) காலை வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சென்ற லாரியை காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில், அரசு இலவசமாக வழங்கும் ரேஷன் அரிசி, பிளாஸ்ட்டிக் மூட்டையில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அரிசியை கடத்திச் சென்ற ஓட்டுநர் ராசு (41) மற்றும் பாஸ்கர் (19) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், லாரியில் கீழ் பகுதியில் 5 அரை டன் ரேஷன் அரிசியை அடுக்கி, அதன் மீது காய்கறிகளை ஏற்றி கேரள மாநிலம் நெடுமங்காடு பகுதியில் இறக்கிய பிறகு, ரேஷன் அரிசியை தமிழ்நாடு-கேரள எல்லை பகுதியான பாறசாலை பகுதிக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.

மேலும் வாகனத்தில் பதுக்கி வைத்திருந்த 4 லட்சத்து 18 ஆயிரத்து 610 ரூபாயையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details