தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவர் கைது - வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவர் கைது

கன்னியாகுமரி: குலசேகரத்தில் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவரை காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து ஐந்து லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

two-person-arrested-for-make-liquor-illegally-in-home-at-kumari
two-person-arrested-for-make-liquor-illegally-in-home-at-kumari

By

Published : May 21, 2020, 4:47 PM IST

கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மதுபான கடைகள் மூடப்பட்டிருந்தன. இந்த காலகட்டத்தில், வீடுகளிலேயே பலர் மதுபானங்களைக் காய்ச்சி வந்தனர்.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மதுபான கடைகள் திறக்கப்பட்டும் சிலர் வீடுகளிலேயே சாராயம் காய்ச்சுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை கட்டுப்படுத்த காவல் துறையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், குலசேகரம் அருகே உள்ள செருப்பாலூர் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, காவல் ஆய்வாளர் ராஜசந்தர் தலைமையில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் செருப்பாலூரைச் சேர்ந்த அய்யப்பன், புஷ்பானேந்திரன் ஆகிய இருவரும் சேர்ந்து அய்யப்பனின் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரது வீட்டிலிருந்த 10 லிட்டர் சாராய ஊறலையும், ஐந்து லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.

இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவல் துறையினர் சிறையிலடைத்தனர்.

இதையும் படிங்க: கட திறந்தாச்சு... ஆனா வாங்கத்தான் ஆளில்ல

ABOUT THE AUTHOR

...view details