தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின் பணி உதவியாளர் பணி நியமனத்தில் முறைகேடு: ஊழியர்கள் போராட்டம்

கன்னியாகுமரி: வேலை இழந்த ஊழியர்கள் இரண்டு பேர் குடும்பத்துடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊழியர்கள் போராட்டம்
ஊழியர்கள் போராட்டம்

By

Published : Jun 7, 2021, 5:20 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள ஆளூர் தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக தெருவிளக்கு பராமரிப்பு வேலையில் ஒப்பந்த அடிப்படையில் இரண்டு பேர் பணிபுரிந்து வந்தனர். முன்னதாக, பேரூராட்சியில் மின் பணி உதவியாளராகப் பணிபுரிந்து வந்தவர் ஓய்வு பெற்றதால் புதிய பணியாளர்களுக்கு நேர்முகத்தேர்வு நடந்தது.

இதில், ஒப்பந்தப் பணியாளர்கள் இருவரும் பங்கேற்றனர். ஆனால், முதலமைச்சர் பதவியேற்ற அன்று புதிதாக இரண்டு ஊழியர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. இந்நிலையில், எட்டு ஆண்டுகளாக பணிபுரிந்த தங்களுக்கு முன்னுரிமை வழங்காமல் புதியதாக இருவருக்கு பணியாணை வழங்கப்பட்டதில், பெருமளவு முறைகேடு நடந்துள்ளது என்றும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இருவரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்ட ஊழியர்கள் இருவரும் தங்களது குடும்பத்தினருடன் ஆளூர் தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகம் முன்பு கையில் பதாகைகளுடன் முற்றுகைப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: ஓவியர் இளையராஜா மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

ABOUT THE AUTHOR

...view details