கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே பொற்றையடி பகுதியில் பயணிகள் வந்த இரண்டு ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளானது.
இரண்டு ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் பலி, 7 பேர் பலத்த காயம்! - accident near in kanyakumari
கன்னியாகுமரி: சுசீந்திரம் அருகே இரண்டு ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த சென்னையைச் சேர்ந்த லேத் தொழிலாளி ரமேஷ் (52) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் சென்ற உறவினர்கள் 7 பேரும், மற்றொரு ஆட்டோவில் வந்த இரண்டு பேரும் பலத்த படுகாயங்களுடன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணி மனைவி மற்றும் குழந்தைகள் கண்முன் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.